`வழுக்கி விழுந்து கை - கால் உடைந்த’ கைதிகள் லிஸ்ட்! - 4 ஆண்டுகளில் எத்தனை பேர்?

`வழுக்கி விழுந்து கை - கால் உடைந்த’ கைதிகள் லிஸ்ட்! - 4 ஆண்டுகளில் எத்தனை பேர்?
`வழுக்கி விழுந்து கை - கால் உடைந்த’ கைதிகள் லிஸ்ட்! - 4 ஆண்டுகளில் எத்தனை பேர்?

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் கழிவறையில் வழுக்கி விழுந்து கை-கால்களை உடைத்துக் கொள்வது முதல்முறையல்ல. நெல்லையில் காவலரை தாக்கிய நபருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் நிகழ்ந்த இதுபோன்ற வழுக்கி விழுந்த சம்பவங்கள் சிலவற்றின் தொகுப்பு இங்கே!

வழுக்கி விழுந்து கை - கால் உடைந்த கைதிகள்

மார்ச் 2022 - சேலத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைதான இருவர், தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து கால்கள் உடைந்தது

2021 - சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் கை, கால் முறிவு

2019 - நெல்லையில் அரிவாளுடன் மிரட்டிய நபர், காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கை முறிவு

2019 - சென்னையில் திருட்டு வழக்கில் கைதான 7 பேர் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்கள் முறிவு

2019 - சென்னையில் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள், காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கைகள் முறிவு

2019 - தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 5 பேர் தப்ப முயன்றபோது கீழே விழுந்து கை -கால் உடைத்துக் கொண்டனர்

2018 - சென்னை புறநகரில் காவலரை அரிவாளால் தாக்கிய 3 பேர், கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களில் முறிவு

குற்ற வழக்கில் சிக்கி விசாரணைக் காவலில் இருப்பவர்கள் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டுடன் காட்சி தருவது தொடர்கிறது. அப்படித்தான் சேலத்தில் கடந்த மார்ச் மாதம் ஆள்கடத்தல் வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடியயோது, அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததாகவும், அதில், அவர்களது கால்கள் உடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை, நெல்லையில் என பல இடங்களிலும் தமிழகத்தில் இது தொடர்ந்துதான் வருகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் திருட்டு வழக்கில் கைதான 7 பேரின் கைகளிலும் முறிவு ஏற்பட்டது. சிலருக்கு கால்களும் முறிந்தன. அனைவரும் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கை, கால்கள் உடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி பாத்ரூம்களில் வழுக்கி விழுந்துவிட்டதாக காவல்துறை கூறும் காரணம் விமர்சனத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. சிலர், இது காவல்துறையினரின் நடவடிக்கைதான் எனக்கூறி, போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம் `குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கையை காவல்துறையினர் உடைப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்’ என்கிற ரீதியிலான குரல்களும் ஒலித்து வருகின்றன. `அதிகாரத்தின் கைகள் சாமாணியர்களே தாக்கும்; இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கலில் எவரேனும் அதிகாரமிக்கவராக இருந்தால், அவர்களுக்கு இப்படி தண்டனை கிடைக்காது’ என்கிற விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கான முற்றுப்புள்ளி என்று கிடைக்கும் என்பதே விடைதெரியா கேள்வியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com