ஊரடங்கு: பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு.. பாலியல் வன்புணர்வு குற்றங்கள் குறைவு..!

ஊரடங்கு: பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு.. பாலியல் வன்புணர்வு குற்றங்கள் குறைவு..!
ஊரடங்கு: பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு.. பாலியல் வன்புணர்வு குற்றங்கள் குறைவு..!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களில் பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதே அறிக்கையில்தான், இந்த மண்டலங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களும் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

 அமெரிக்க தேசிய ஆய்வுக் கட்டுரையாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட, இந்த  ஆய்வு இந்தியாவிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது.  கடந்த ஆண்டு மே மாதம் 266 ஆக இருந்த வீட்டு வன்முறைப் புகார்கள், இப்போது, 392 ற்கு உயர்ந்துள்ளது. அதேபோல, 2018 ஆம் ஆண்டு 198 ஆக இருந்த பாலியல் புகார்கள், கடந்த ஆண்டு 163 ஆகவும், அந்த எண்ணிக்கை தற்போது  54 ஆக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு மே மாதம் 266 ஆக இருந்த சைபர் குற்றங்கள், தற்போது 73 ஆக குறைந்துள்ளது.

கொரோனா இல்லாத பசுமை மண்டலங்களை ஒப்பிடும்போது, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் பாலியல் புகார்கள் குறைந்திருக்கின்றன. ’பொது இடங்கள், பொது போக்குவரத்து மற்றும் பணியிடங்களின் இயக்கம் இல்லாதது காரணமாக இருக்கலாம்’ இந்த ஆய்வில் கூறப்படுகிறது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com