காதலித்து ஏமாற்றிய சக வழக்கறிஞரை காவல்துறை உதவியோடு சிறைக்கு தள்ளிய பெண்!

காதலித்து ஏமாற்றிய சக வழக்கறிஞரை காவல்துறை உதவியோடு சிறைக்கு தள்ளிய பெண்!

காதலித்து ஏமாற்றிய சக வழக்கறிஞரை காவல்துறை உதவியோடு சிறைக்கு தள்ளிய பெண்!
Published on

பல ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்ற முயன்ற வழக்கறிஞரை, அந்தப் பெண்ணே கையும் களவுமாக காவல்துறையில் பிடித்துக்கொடுத்தள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 34), வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர், தன்னுடன் ஒன்றாக படித்த பெண் வழக்கறிஞராக காதலித்து வந்துள்ளார். இருவரும் அந்நியோன்யமாக இருந்த வந்த நிலையில், திடீரென முரளி சரிவர பேசாமல் விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார். மேலும் அந்தப் பெண் வழக்கறிஞரை, சாதிய அடையாளத்தை குறிப்பிட்டு பேசி இழிவுபடுத்தி திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

தொடர்ந்து வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த பெண் வழக்கறிஞர், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர் முரளியை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது 417, 420, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 15ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

தன்னை காதலித்து ஏமாற்றிய வழக்கறிஞரை, பெண் வழக்கறிஞர் சிறையில் தள்ளியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com