2 குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டணை விதிப்பு..!
குன்றத்தூரை சேர்ந்த விஜய்- அபிராமி தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த பிரியாணிக் கடையில் பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் மீனாட்சி சுந்தரத்துடன் வாழ்வதற்காக, தடையாக இருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்தார்.
குழந்தைகளை கொலை செய்தபின் மீனாட்சி சுந்தரத்துடன் கேரளா செல்லவிருந்தபோது இரண்டு பேரும் கைதாகியிருந்தனர். இதன்பின் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் கொலை செய்ய ஐடியா கொடுத்த பிரியாணி கடை மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பைக் கேட்ட அபிராமி அங்கேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். அதேபோல் கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் அழுதார்.