கும்பகோணம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோவில் கைது

கும்பகோணம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோவில் கைது
கும்பகோணம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தீ காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்பவர் 60 வயது நிரம்பிய அன்பழகன். திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியனிடம் மூலமாக சிறுமிக்கு அரசிடம் இருந்து கல்வி உதவி தொகை மற்றும் நிவாரணம் வாங்கி தருவதாக சிறுமியின் பெற்றோரிடம் அன்பழகன் என்பவர் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து நேற்று இருசக்கர வாகனத்தில் சட்டமன்ற உறுப்பினரை சந்திப்பதாக சொல்லி சிறுமியை அழைத்துச் சென்றார் அன்பழகன்.

இதனையடுத்து, வாகனத்தில் செல்லும்போது தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அன்பழகனிடம் உறவினர்கள் கேட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அன்பழகனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com