கிருஷ்ணகிரி: சந்தன மரம் கடத்தியதாக இருவர் கைது

கிருஷ்ணகிரி: சந்தன மரம் கடத்தியதாக இருவர் கைது

கிருஷ்ணகிரி: சந்தன மரம் கடத்தியதாக இருவர் கைது
Published on

சாமல்பட்டி அருகே சந்தன மரம் கடத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூர் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்லும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் சிக்கினர்,

இதையடுத்து சந்தன மரம் கடத்திய இரண்டு நபர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டையும் பறிமுதல் செய்து சாமல்பட்டி காவல் நிலையத்தில் வைத்து பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இருவரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்காரவேலு மற்றும் முருகன் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை அழைத்துச் சென்று கிருஷ்ணகிரி வன அலுவலரிடம் ஒப்படைத்து பிறகு அவர்களை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com