\
சாலையோரம் கிடத்த நாட்டுத்துப்பாக்கிகள், இருசக்கர வாகனம்... கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சாலையோரம் கிடத்த நாட்டுத்துப்பாக்கிகள், இருசக்கர வாகனம்... கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சாலையோரம் கிடத்த நாட்டுத்துப்பாக்கிகள், இருசக்கர வாகனம்... கிருஷ்ணகிரியில் பரபரப்பு
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இரவு காவலர்கள் ரோந்து பணியின் போது சாலையோரம் நாட்டுத் துப்பாக்கி உடன் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமம் முதல் மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் நேற்று இரவு ஊத்தங்கரை காவலர்கள் எஸ் ஐ குட்டியப்பன் தலைமையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது மூங்கிலேரி அடுத்த மண்ணாடிப்பட்டி காப்பு காட்டு சாலையொரம் செல்லும் பொது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், அங்கிருந்த காவலர்களை கண்டு அவர்களிடம் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனம் 2 கைப்பேசி ஒரு நித்தி பேட்டரி ஒரு நாட்டு துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

மேற்கண்ட பொருட்களை பறிமுதல் செய்த காவலர்கள் கைப்பேசி மற்றும் இருசக்கர வாகன எண்களைக் கொண்டு வழக்குப் பதிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் மேற்கொண்டு ஓடிச் சென்ற நான்குபேர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தேடி வருகின்றன .சாலை ஓரம் இரவு நேரத்தில் இதுபோன்ற நாட்டுத்துப்பாக்கி கிடைத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com