”அய்யோ.. 20 குடும்பத்த நாசம் பண்ணிட்டேனே...!” கதறி கதறி அழுத பெண்.. நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்!

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், நீலமேகம் மற்றும் திருமாள் ஆகியோரது புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி பேனரை, அவர்களது வீட்டின் முன்பு வைத்து செருப்பு மாலை அணிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்த நபரின் வீட்டின் முன்பு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஈரோடு பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வன் என்பவர், யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோரும் 18 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, இந்நிறுவனத்திற்கு ஏஜென்டுகளாக செயல்பட்ட திருமால், ஆறுமுகம், நீலமேகம் ஆகியோர் , பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக பணம் ஏதும் வராத நிலையில், திடீரென முத்துசெல்வன் மற்றும் ஏஜென்டுகள் தலைமைவாகினர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், நீலமேகம் மற்றும் திருமால் ஆகியோரது புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி பேனரை, அவர்களது வீட்டின் முன்பு வைத்து செருப்பு மாலை அணிவித்தனர். இதையறிந்து வந்த காவல்துறையினர். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவாரத்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com