கோடநாடு வழக்கு: ஜம்சிர் அலியிடம் 8 மணி நேரம் விசாரணை

கோடநாடு வழக்கு: ஜம்சிர் அலியிடம் 8 மணி நேரம் விசாரணை

கோடநாடு வழக்கு: ஜம்சிர் அலியிடம் 8 மணி நேரம் விசாரணை
Published on

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சிர் அலியிடம், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், கனகராஜின் மனைவி மற்றும் மைத்துனர், எஸ்டேட் மேலாளர் நடராஜன் போன்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், ஜம்சிர் அலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு பங்களாவுக்குள் நுழைந்த 4 பேரில் ஜம்சிர் அலியும் ஒருவர் என்பதால், கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் விவரங்களையும், அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன? என்ற விவரங்களையும் காவல்துறையினர் வாக்குமூலமாக வீடியோ பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய வாளையார் மனோஜ், ஜாமினில் தளர்வுகள் கேட்டு அளிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com