\
கொடைக்கானல்: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் - 3 பேர் கைது

கொடைக்கானல்: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் - 3 பேர் கைது

கொடைக்கானல்: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் - 3 பேர் கைது
Published on

கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டிப்போ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு கொடைக்கானல் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய போலீசார் அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஜனகராஜ், மதுரையைச் சேர்ந்த சரண், ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த மசாஜ் சென்டரில் இருந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com