\
இந்திய வம்சாவளி 8 மாத பெண் குழந்தை உள்பட 4 பேரை கடத்தி கொலை - பின்னணி என்ன?

இந்திய வம்சாவளி 8 மாத பெண் குழந்தை உள்பட 4 பேரை கடத்தி கொலை - பின்னணி என்ன?

இந்திய வம்சாவளி 8 மாத பெண் குழந்தை உள்பட 4 பேரை கடத்தி கொலை - பின்னணி என்ன?
Published on

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளிகள் கடத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டு உள்ளது. 

இந்திய வம்சாவளியான ஜஸ்தீப் சிங் மற்றும் அவரது மனைவி ஜஸ்லீன் கௌர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு எட்டு மாதப் பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் அமன்தீப் சிங் என்ற உறவினரும் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று இந்த நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

கடத்தி செல்லப்பட்டவர்களின் உடல்கள் இருதினங்களுக்கு முன்பு  ஹட்சின்சன் சாலைக்கு அருகிலுள்ள பழத்தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பண்னை தொழிலாளி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது.

கிடைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சிசிவிடி காட்சிகளை வைத்து கடத்திய குற்றவாளியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஆனால் காவல்துறை குற்றவாளியை நெருங்கியதும், அவர் தப்பிக்க முயன்று தற்கொலைக்கு முயற்சி செய்தததால் , தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்கள் மற்றும் வேறு யாரெல்லாம் இந்த சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com