சேலஞ்சிங் ஸ்டார் டூ கொலைக் குற்றவாளி ... நடிகர் தர்ஷனுக்கு எதிராக அடுத்தடுத்து சிக்கிய ஆதாரங்கள்

கர்நாடகா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக அடுத்தடுத்து முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்

யார் இவர்?

கன்னட சினிமா ரசிகர்களால் ’சேலஞ்சிங் ஸ்டார்’என்று கொண்டாடப்படும் நடிகர் தர்ஷன் 1990 களின் மத்தியில் சிறிய படங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியர்.

2002-ஆம் ஆண்டு வெளியான மெஜஸ்டிக் திரைப்படத்தில் முதல் முதலாக பெரிய திரையில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின் கரியா (2003), கலாசிபால்யா (2005), கஜா (2008), நவகிரகம் (2008), சாரதி (2011), புல்புல் (2013), யஜமானா (2019), ராபர்ட் (2021) மற்றும் காற்றா (2021) போன்ற வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களில் நடித்து கன்னடத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் தர்ஷன்.

இவர் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸ் மற்றும் மீனா தம்பதியினருக்கு மகனாக, 16 பிப்ரவரி 1977 அன்று கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டில் பிறந்தவர். கன்னடத் திரைத் துறையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த தர்ஷன் கவுடா தற்போது தனது ரசிகர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகர் தர்ஷன்

தர்ஷன் கவுடாவின் ரசிகரான 33 வயதான ரேணுகாசுவாமி என்பவர் கடந்த 9-ம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே சடலமாக மீட்கப்பட்டர்.

உடல் முழுக்க காயங்களுடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சித்ர துர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பதும் கடந்த மாதம் திருமணமான அவர் அங்குள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் எவ்வாறு சுமன்னாஹள்ளியில் சடலமாகக் கிடந்திருக்ககூடம் என விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Murder case
Murder casept desk

இந்நிலையில் கடந்த 10ம் தேதி பணத் தகராறு காரணமாக அவரைக் கொலை செய்ததாகக் கூறி 3 நபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவின் சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவதூறு கருத்து பதிவு செய்துள்ளார். நடிகர் தர்ஷனின் திருமண வாழ்வில் நடந்த குழப்பங்களுக்கும் அவர் மனைவியைப் பிரிந்து வாழ்வதற்கும் பவித்ராதான் காரணம் எனக் கூறி அவரைத் திட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதோடு நடிகை பவித்ரா கௌடாவிற்கு ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா மற்றும் தர்ஷன், சித்ரதுர்காவில் தர்ஷனுக்கு ரசிகர் மன்றம் நடத்தி வந்த ரகு என்பவரிடம் ரேணுகாசாமியைப் பற்றிய தகவல்களை சேகரிக்கக் கூறியுள்ளனர்.

Actor Darshan
Actor Darshanpt desk

தர்ஷனின் அறிவுரைப்படி ரேணுகாசாமியைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டு நடிகரின் அறிவுரைப்படி ரேணுகாசாமியை கடத்தி பெங்களூரு அழைத்து வந்துள்ளனர். பின்னர் பவித்ரா மற்றும் அடியாட்கள் இணைந்து ரேணுகாசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ரேணுகாசாமி உயிரிழந்துவிட்டதை அறிந்த அவர்கள் சடலத்தை ராஜா கால்வாய் அருகில் வீசிச் சென்றுள்ளனர். இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த செவ்வாய் கிழமை நடிகர் தர்ஷன் கவுடா, நடிகை பவித்ராவுடன் சேர்த்து இக்கொலையில் தொடர்புடைய 12 நபர்களைப் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் நடிகர் தர்ஷனுக்கு எதிராகப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நடிகர் தர்ஷன்
”மரியாதை தெரியாத நபர்.. ஏனென்றால் அவருக்கு இதுவரை கிடைத்ததே இல்லை”! சேவாக்கை விளாசிய முன்.BAN வீரர்!

ஆதாரங்களின் பட்டியல்

ரேணுகாசாமியை தாக்க பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகள், குற்றவாளிகள் ரேணுகாசாமியை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள், ரேணுகாசாமியை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கயிறு, கொலை நடந்த இடத்தில் இருந்து குற்றவாளியின் மொபைல் இருப்பிட விவரங்கள், ரேணுகாசாமியைக் கடத்த பயன்படுத்திய கார், அவர் தாக்கப்பட்ட இடத்தின் சிசிடிவி காட்சிகள், வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வாக்குமூலம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய தண்ணீர் மற்றும் மது பாட்டில்கள், தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வாட்ஸ்அப் சேட் மற்றும் அழைப்பு விவரங்கள், ரேணுகாசாமியின் உடலை அப்புறப்படுத்திய பிறகு காரில் இருந்த சிசிடிவி காட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தர்ஷன் கொடுத்ததாகக் கூறப்படும் ரூ.30 லட்சம் விவரங்கள் ஆகியவற்ரை போலீசார் கண்டுபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் தர்ஷன்
யார் சேவாக்? அவருடைய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - ஷாகிப் அல் ஹசன்

பிரேதப் பரிசோதனை அறிக்கை :

இந்நிலையில் ரேணுகாசாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ரேணுகாசாமி சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறிகள் இருப்பது தெலிவாகியுள்ளது. அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக ரேணுகாசாமி இறந்ததாக சமீபத்திய பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுளது.

நடிகர் தர்ஷன்
“பணத்துக்காக IPL போனால் இதுதான் நடக்கும்” ட்ரோல் செய்த PAK ரசிகர்.. பங்கமாக கலாய்த்த முன். NZ வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com