சென்னை: ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தல்... கேரள இளைஞர் கைது!

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த கேரள இளைஞரை கைது செய்த போலீசார் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
accused
accusedpt desk

ரயில் மூலம் ஒடிசாவில் இருந்து தாம்பரத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

accused
accusedpt desk

விசாரணையில், அவர் பெயர் முகமது ரிஸ்வான் (27) என்பதும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அவர், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயிலில் கடத்தி வந்து, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சில்லறை விற்பனைக்கு எடுத்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை சோதனை செய்த போது இரண்டு லட்சம் மதிப்பிலான 18 கிலோ 300 கிராம் கஞ்சா அவரிடம் இருந்தது. அதை கைப்பற்றிய காவல்துறையினர், அவரை கைதும் செய்தனர்.

இதையடுத்து தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போல் பள்ளிக்கரணை மதுவிலக்கு ஆய்வாளர் நட்ராஜ், சேலையூர் மப்பேடு அருகே 2 கிலோ கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த அருள்குமார் (28) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com