\
மாதிரி படம்
மாதிரி படம்கூகுள்

கேரளா | பாலியல் தொழிலுக்காக வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட இளம்பெண்! அதிரடியாக மீட்ட போலீசார்

கொச்சியில் விபச்சார கும்பலிடமிருந்து வங்கதேச சிறுமியை மீட்ட போலிசார். அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.
Published on

கொச்சியில் பாலியல் தொழில் கும்பலிடமிருந்து வங்கதேச சிறுமியை மீட்ட போலிசார். அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.

கொச்சி எலமகரையில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போலிசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற போலிசார் அந்த கும்பலை வளைத்து பிடித்தனர். சுமார் 20 மேற்பட்டோர் அடங்கிய அந்த குழுவில் 20 வயது கொண்ட ஒரு இளம் பெண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அந்த இளம்பெண் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

கடந்த வாரம் அந்த இளம்பெண் உள்ளிட்டோரை அந்த குழுவினர் பெங்களூரிலிருந்து கொச்சிக்கு பாலியல் தொழிலுக்காக அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கும்பலில் முக்கியக்குற்றவாளியாக கருதப்படும் செரீனா என்ற பெண் மாநிலங்களுக்கு இடையேயான பாலியல் தொழில் கும்பலின் தலைவி என்று கூறப்படுகிறது.

செரீனாவையும் இவருக்கு உதவியாக இருந்த சியாம் என்பவரையும் மற்றொரு பெண்ணையும் கைது செய்த போலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைை அவர்கள் கடத்தி வந்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். தற்பொழுது அந்த சிறுமி போலிசாரின் காவலில் இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com