கேரளா: ஓட்டல் உரிமையாளர் கொலை... சடலத்தை சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய ஊழியர்கள்!

கோழிக்கோடு அருகே ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த இரு ஊழியர்கள், அவரது சடலத்தை சூட்கேஸில் வைத்து அடைத்து அட்டப்பாடி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
accused
accusedpt desk

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். தொழிலதிபரான இவர், உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், இவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது மகன் நவ்ஷத் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

canal
canalpt desk

இந்த நிலையில் அட்டப்பாடி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது அதில், சித்திக் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சித்திக்குக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றி வரும் ஷிபிலி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷிபிலி, ஓட்டலில் வேலை பார்க்கும் பெண் ஊழியரான பர்ஹானாவுடன் சேர்ந்து சித்திக்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஷிபிலி (22), பர்ஹானா (18) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com