உடன்பிறந்த சகோதரனால் ஏழு மாத கருவை சுமந்த சிறுமி... கருக்கலைப்புக்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம்!

“சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்தால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் சந்திக்கும் நிலை அவளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது”- நீதிமன்றம்
அரசாணை
அரசாணைPT

கேரளாவில் தனது சகோதரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியிட்ட தீர்ப்பில் இதை தெரிவித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

மருத்துவக் குழு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் ஏஏ, கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்காவிட்டால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

நடந்தது என்ன?

கேரளாவில் தனது உடன் பிறந்த சகோதரனாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி கர்பம் தரித்திருந்ததாகக்கூறுப்படுகிறது.

இச்சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோர், தனது பெண்ணின் எதிர்காலத்தை முன்னிட்டும் சமூக மற்றும் மருத்துவ சிக்கல்களை முன்னிட்டும் கர்பத்தை கலைக்கும் பொருட்டு மருத்துவரை அணுகிஉள்ளனர். வயிற்றிலிருக்கும் கருவை கலைப்பது என்பது மருத்துவதுறைக்கு எதிரான செயல் என்பதால், இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், தனது பெண்குழந்தையின் வளரும் ஏழுமாத கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இவ் வழக்கானது கேரள உயர்நீதிமன்றத்திற்கு விசாரனைக்கு வந்துள்ளது.

இது குறித்து உயர்நீதிமன்றம் மருத்துவரிடம் உரிய அறிக்கையை சமர்பிக்க உத்திரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், மருத்துவ வாரியமானது, ”இச்சிறுமிக்கு குழந்தை பிறந்தால், பல்வேறு சமூக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், சிறுமியின் கர்ப்பம் தொடர்ந்தால் சிறுமியின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், டீனேஜ் கர்ப்பத்தின் சிக்கல்களால் அவரது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆகவே, மைனர் பெண் கர்ப்பத்தை கலைப்பது என்ற மருத்துவ முடிவிற்கு (எம்டிபி) உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறுமி தகுதியுடையவர்” என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

மருத்துவ வாரியம் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் ஏஏ, "நடந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, சிறுமி குழந்தையைப்பெற்றெடுத்தால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் சந்திக்கும் நிலை அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், கர்ப்பத்தை கலைக்க மனுதாரர் கோரியுள்ள அனுமதியை தவிர்க்க முடியாதது. எவ்வாறாயினும், மேற்படி பிரச்சினையை நிவர்த்தி செய்ய, இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரரின் மகளின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி வழங்குகிறேன், ”என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுமியின் கர்ப்பத்தை காலதாமதமின்றி கலைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அலுவலர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com