சோஷியல் மீடியாவில் ப்ளாக் செய்த பெண்களை மிரட்டிய காசி?: பரவும் ஆடியோ

சோஷியல் மீடியாவில் ப்ளாக் செய்த பெண்களை மிரட்டிய காசி?: பரவும் ஆடியோ
சோஷியல் மீடியாவில் ப்ளாக் செய்த பெண்களை மிரட்டிய காசி?: பரவும் ஆடியோ

சோஷியல் மீடியாவில் தன்னை ப்ளாக் செய்த பெண்களை காசி செல்போனில் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் போலியாக கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட காசி மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அடுத்தடுத்து பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வரை 5 இளம் பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி காசியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இளம் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. காசியால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவும் இளம் பெண்களிடம் பணம் கேட்டு மிராட்டவும் காசிக்கு உதவியாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

இந்நிலையில் காசி பெண்களை செல்போனை மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காசி தன்னை சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்த பெண்ணை மிரட்டி பேசுகிறார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com