“கரூர் பள்ளி மாணவி தற்கொலை; காவல் ஆய்வாளரை கைது செய்க” -ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்

“கரூர் பள்ளி மாணவி தற்கொலை; காவல் ஆய்வாளரை கைது செய்க” -ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்
“கரூர் பள்ளி மாணவி தற்கொலை; காவல் ஆய்வாளரை கைது செய்க” -ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்

பாலியல் துன்புறுத்தலால் கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து புகார் கொடுக்க சென்ற அவரின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை கைது செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஜோதிமணி தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ பாலியல் துன்புறுத்தலால் கரூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட அன்றே இது குறித்து புகார் அளிக்க அவரது தாயார் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் சென்றனர்.

புகார் கொடுக்க சென்றவர்களை வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் நடந்துகொண்டது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே அவரை பணிநீக்கம் செய்து, துறை ரீதியாக விசாரித்து கைது செய்யவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com