குற்றம்
கரூர்: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த் கைது
கரூர்: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த் கைது
கரூரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய மருத்துவர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரைச் சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் தனது மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் ஒருவரின் மகளான 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையப் போலீசார் போக்ஸோ சட்டத்தில் மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
புகாரின் அடிப்படையில் ரஜினிகாந்த்தின் மேலாளர் சரவணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில், தனிப்படை போலீசார் மருத்துவர் ரஜினிகாந்தை தற்போது கைது செய்துள்ளனர்.