கரூர்: திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்... இருவர் கைது

கரூர்: திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்... இருவர் கைது

கரூர்: திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்... இருவர் கைது
Published on

குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியில் ஆண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை அடுத்த விட்டுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவர், கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் திருமணமான பெண் ஒருவர், தனது 10 மாத பெண குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், லாலாபேட்டை அடுத்த பிள்ளாபாளையம் அருகே கட்டளை மேட்டுவாய்க்கால் கரையோரத்தில் பிறப்புறுப்பு மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கதிர்வேல் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் கதிர்வேல் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.

எதற்காக இந்த கொடூர கொலை நடந்தது? என்ற விசாரணையில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த தர்மதுரை மனைவியுடன், கதிர்வேல் தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணனும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தர்மதுரை மற்றும் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.


சம்பவ இடத்தில், கரூர் காவல் கண்காணிப்பாளர் பகலவன், டிஎஸ்பி சசிதர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com