மனைவி உடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் - கணவனால் டிரைவருக்கு நடந்த கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவியின் காதலன் என்று கூறப்படும் இளைஞரின் குரல்வளை பகுதியை கணவர் கீறி ரத்தத்தை குடித்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vijay
Vijay Twitter

கர்நாடக மாநிலம் சிக்காபாலப்பூரில் வசித்து வருபவர் 32 வயதான விஜய். மாண்டியாபேட்டையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பலசரக்கு பொருட்கள் மற்றும் துணிகளை வாடகைக்கு வாகனம் அமர்த்தி ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். அந்த வகையில், 30 வயதான மாரேஷ் என்பவரின் டாட்டா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வப்போது வியாபாரம் செய்து வந்த நிலையில், விஜய்யின் மனைவியுடன் வாடகை வாகனம் வைத்திருக்கும் இளைஞர் மாரேஷ் நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாரேஷ் உடன் நீண்ட நேரம் விஜய்யின் மனைவி அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

Vijay slits maresh throat
Vijay slits maresh throat

தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியும், அதனை பொருட்படுத்தாமல் மாரேஷ் தொடர்ந்து பேசி வந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த விஜய், கடந்த 19 ஆம் தேதி சித்தப்பள்ளிக்கு அருகில் உள்ள பண்ணைக்கு, தக்காளிகளை ஏற்றிக் கொண்டு செல்ல டாட்டா ஏஸ் வாகனத்தை கொண்டு வருமாறு மாரேஷ்க்கு தகவல் சொல்லச் சொல்லியுள்ளார். தனது உறவினரும் பி.காம் படித்து வந்த மாணவரும, தனது உதவியாளருமான பாபுவை அழைத்துச் சென்றுள்ளார். இதனை அடுத்து பாபு தகவல் தெரிவிக்க, தனது வாகனத்துடன் மாரேஷ் வந்த நிலையில், விஜய்யும் பாபுவும் கொண்டு செல்ல வேண்டிய தக்காளியைக் காண்பிப்பதாகக் கூறி அவரைத் தங்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்றுள்ளனர். பண்ணைக்குச் செல்வதற்குப் பதிலாக, அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்று, குரல்வளை பகுதியில் சிறிய கத்தியால் கிழித்து ரத்ததை குடித்துள்ளார் விஜய்.

இதனை வீடியோவாக பாபுவை எடுக்கச் சொல்லியுள்ளார் விஜய். சிறிய அளவில் காயம் அடைந்த மாரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார். எனினும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மாரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விஜய்யை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜய்யின் உறவினர் பாபுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com