கர்நாடகா: மது போதையில் வந்த மாணவரை அனுமதிக்க மறுத்த கல்லூரி மேலாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

பெங்களுர் அருகே போதையில் வந்த மாணவரை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்ததால் மேலாளரை. கத்தியால் குத்திக் கொன்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களுாரு, அம்ருதஹள்ளியில் சிந்தி என்ற பெயரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூய்மை பணியாளர்கள் பிரிவின் மேலாளராக ஜெய் கிஷோர் ராய் (47) என்பவர் இருந்தார். இந்நிலையில், கல்லூரி காவலாளிகள் பிரிவின் மேலாளர் பணிக்கு வராத காரணத்தால் ஜெய் கிஷோர் ராய்க்கு கூடுதலாக காவலாளிகள் பிரிவு மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கல்லூரியின் நுழைவு வாயிலில் ஜெய் கிஷோர் ராய் பணியில் இருந்தார்.

Tragedy
Tragedypt desk

அப்போது அங்கு வந்த பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் பார்கவ், (22) மதுபோதையில் இருந்துள்ளார். இதனால், அவரை கல்லூரிக்குள் அனுமதிக்க ஜெய் கிஷோர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம், வாக்குவாதம் செய்த பார்கவ் அருகில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வந்து, ஜெய் கிஷோர் ராயின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்ருதஹள்ளி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பார்கவை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com