கர்நாடகா: மது பானத்தை ஊற்றி நண்பரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி - பாரில் நடந்த பயங்கர சம்பவம்

கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் பகுதியில் பாரில் குடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுவை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hospital
Hospitalpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

ஆனேக்கல் நகரில் உள்ள சஞ்சய் பாருக்கு நாகேஷ் , வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் மது அருந்தச் சென்றனர். அப்போது போதை ஏறி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென நாகேஷ் மீது மதுவை ஊற்றி வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் தீயை வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள் தீயை அணைத்துள்ளனர்.

public
public
Hospital
சிகிச்சை பார்ப்பது போல வந்து வெறிச்செயல்.. சென்னையில் உறைய வைத்த இரட்டை கொலை.. சிக்கிய செல்போன்!

இதையடுத்து நாகேஷை மீட்ட பார் ஊழியர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்ததுடன், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த ஆனேக்கல் போலீசார், பாரில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகேஷிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போதையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் வெங்கடசாமி, முனிராஜு ஆகியோர் தீ வைத்து எரித்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து தப்பியோடிய வெங்கிடசாமி, முனிராஜு ஆகியோரை ஆனேக்கல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com