காரைக்கால்: வங்கி ஊழியர் என பேசி ஏடிஎம் நம்பர் & ஓடிபி பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி.!

காரைக்கால்: வங்கி ஊழியர் என பேசி ஏடிஎம் நம்பர் & ஓடிபி பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி.!
காரைக்கால்: வங்கி ஊழியர் என பேசி ஏடிஎம் நம்பர் & ஓடிபி பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி.!

காரைக்காலில் வங்கி ஊழியர் என பேசி ஏடிஎம் கார்டு மற்றும் ஓ.டி.பி எண்களை பெற்று ரூ.2.50 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சிராஜுதீன் (54). கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் இந்தியில் பேசியுள்ளார். அப்போது தனக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசும்படி முகம்மது சிராஜுதீன் கூறியுள்ளார். அதை தொடர்ந்து மர்ம நபர் ஆங்கிலத்தில் தான் பிரபல வங்கி கிரெடிட் கார்டு பிரிவிலிருந்து பேசுவதாக கூறி, உங்களது வங்கி ஏ.டி.எம் கார்டு ஆக்டிவேட் செய்யாமல் உள்ளது. அதனை உடனே ஆக்டிவேட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து, முகம்மது சிராஜுதீனின் வங்கி மொபைல் ஆப்பை திறக்க சொல்லி, படிப்படியாக, கார்டு எண், பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பெற்று செல்போனுக்கு வந்த ஓ.டி.பி எண்ணையும் முகம்மது சிராஜுதீனிடமிருந்து பெற்றுள்ளார். இதனை அடுத்த சில நிமிடங்களில், முகம்மது சிராஜுதின் வங்கி கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை ஏதோ பொருள் வாங்கியதாக காட்டி மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.

தாமதமாக தான் ஏமாந்துவிட்டதை உணர்ந்த முகம்மது சிராஜுதின், தொடர்பு கொண்ட மர்ம நபரை தொடர்பு கொண்டபோது அவரால் மர்ம நபரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் தனது வங்கிக்கு சென்று, கார்டை பிளாக் செய்ய சொல்லியதோடு, பறிகொடுத்த பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்தார். மேலும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் மற்றும் ஆர்பிஐக்கு புகார் அளித்தார்.

ஆனால் வங்கி, சைபர் கிரைம், ஆர்பி.ஐ என பல நாட்கள் தொடர்பு கொண்டும் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனை அடுத்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் இது குறித்து முகம்மது சிராஜுதின் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com