காஞ்சிபுரம்: முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

காஞ்சிபுரம்: முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

காஞ்சிபுரம்: முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
Published on

காஞ்சிபுரத்தில் முன் விரோதம் காரணமாக வீட்டில் இருந்தவரை கொலை செய்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம், எம்ஜிஆர் நகர், குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (25), இவர் மீது 5-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்த தேவேந்திரனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிமங்கலம் போலீசார், கொலையில் ஈடுபட்ட மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (23), சுரேந்தர் (20), சதஷ் (20), சுதாகர் (20), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (21), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பு தேவேந்திரனுக்கும் சுரேந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சுரேந்தர் மற்றும் விக்கி ஆகியோர் சேர்ந்து தேவந்திரனை அடித்துள்ளனர். பின்னர் இருவரையும் தேவேந்திரன் அடித்துவிட்டு அவரது அண்ணன் வீட்டிற்குச் சென்று விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விக்கி, சுரேந்தர், ரைசுல் ஆகியோரை தேவேந்திரன் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து தேவேந்திரனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com