\
போக்ஸோ வழக்கில் கைதான தேவ இரக்கம்
போக்ஸோ வழக்கில் கைதான தேவ இரக்கம்pt desk

காஞ்சிபுரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் கைது

காஞ்சிபுரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்திருக்கிறார். தாய் உயிரிழந்துவிட்ட நிலையில், அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வந்துள்ளார் சிறுமி. சிறுமியின் தந்தை சர்ச் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவார காலம் சிறுமி சர்ச்சில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

Police station
Police stationpt desk

அப்போது அங்கு பாதிரியாராக இருந்து வரும் தேவ இரக்கம் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி, அங்கிருந்து கத்தியபடி வீட்டிற்குச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையறிந்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இந்த மனு சென்றுள்ளது. அவர் விசாரைணை மேற்கொண்டார்.

போக்ஸோ வழக்கில் கைதான தேவ இரக்கம்
ஆந்திரா | 17 நாள் தேடுதல் வேட்டைக்குப்பின் கேரள போலீஸிடம் சிக்கிய ஸ்பைடர் திருடன்! அதிர்ச்சி பின்னணி

விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையை, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பாதிரியார் தேவ இரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com