\
கள்ளக்குறிச்சி: மயில்களை வேட்டையாடியதாக 3 இளைஞர்கள் கைது

கள்ளக்குறிச்சி: மயில்களை வேட்டையாடியதாக 3 இளைஞர்கள் கைது

கள்ளக்குறிச்சி: மயில்களை வேட்டையாடியதாக 3 இளைஞர்கள் கைது
Published on

கள்ளக்குறிச்சி அருகே மயிலை வேட்டையாடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரூர் கிராம எல்லைப் பகுதியில் வனவர் முருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது மரூர் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் மூன்று மயில்களை வேட்டையாடி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து மயில்களை வேட்டையாடிய பாஸ்கர் ராஜ், பிரவீன் குமார், அருள் ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com