கள்ளக்குறிச்சி | பெண்ணிடம் தங்க சங்கிலியை திருடியதாக மற்றொரு பெண் கைது
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திவ்யா என்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து திவ்யா திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் சோலகனார்வயல் கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற பேச்சியம்மாள் நகையை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்தப் பெண்ணிடம் திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் பெண் தலைமை காவலர் கலையரசி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.