ரூ.20 லட்சம் மோசடி – ஒருவர் கைதுpt desk
குற்றம்
கள்ளக்குறிச்சி | அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி – ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: பாலாஜி
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி; 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் இதனை அடுத்து பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் தனது பணத்தை மீட்டு தரக் கோரி புகார் அளித்திருந்தார்
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட சாந்தகுமாரை அழைத்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சாந்தகுமாரை, திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.