வாகன சோதனையில் சிக்கிய சிறார்கள்: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதாக 525 வழக்குகள் பதிவு

வாகன சோதனையில் சிக்கிய சிறார்கள்: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதாக 525 வழக்குகள் பதிவு
வாகன சோதனையில் சிக்கிய சிறார்கள்: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதாக 525 வழக்குகள் பதிவு

(கோப்பு புகைப்படம்)

வாகன சோதனையில் சிறார்கள் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வயது குறைவான நபர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கும், மூன்று நபர்கள் வாகனத்தில் செல்வதை தடுப்பதற்கும், 14.06.2022 அன்று வாகனங்களை ஓட்டும் சிறார்களுக்கு எதிராக சிறப்பு வாகன தணிக்கையை சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்தியது. இதில், மொத்தம் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.



அவர்களின் பெற்றோரை வரவழைத்து, போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வயது குறைவான நபர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களுக்கும், சிறார்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சட்டப்படி அபராதம் அவர்களிடமிருந்து பெறப்பட்டதுடன் ஓர் உறுதிமொழிக் கடிதமும் பெற்ற பிறகு அவர்களை அனுப்பியதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com