குற்றம்
திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
திண்டுக்கல் 12 வயது சிறுமி கொலைவழக்கில் சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ சாட்சியங்களை நிரூபிக்காததால் திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகியிருக்கிறார்கள். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது. கொல்லப்பட்ட சிறுமி கலைவாணிக்காக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்