16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ததாக நகைக்கடை தொழிலாளி கைது

16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ததாக நகைக்கடை தொழிலாளி கைது

16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ததாக நகைக்கடை தொழிலாளி கைது
Published on

ஆத்தூர் அருகே 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்த நகைக்கடை தொழிலாளியை கைது செய்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவ புரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் அருள்பிரகாஷ் (30). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நிலையில், ஆத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 வயது பள்ளி மாணவியை அருள் பிரகாஷ் திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சேலம் சிறுமியர் வரவேற்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருள்பிரகாசை மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பு பெற்றோரின் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com