கரூரில் IT ரெய்டு நடத்தச் சென்ற பெண் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி - நடந்தது என்ன?

கரூரில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனைக்குச் சென்றபோது, திமுக வினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி 4 அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ஆய்வாளார்கள் 4 பேர் சோதனைக்குச் சென்றுள்ளனர். அந்த தருணத்தில் திமுகவினர் அவர்களை தாக்குதலுக்கு உட்படுத்தியதாக அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில் காயமுற்றதாக அதிகாரிகள் 4 பேர் காந்தி கிராமம் அரசு மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்கள். இதில் காயத்திரி என்ற பெண் ஆய்வாளாரின் கையில் காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த காட்சியை பதிவு செய்த செய்தியாளர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் அவர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதைப்பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com