மயிலாடுதுறை: பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம்

மயிலாடுதுறை: பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம்

மயிலாடுதுறை: பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம்
Published on

மயிலாடுதுறை அருகே பிறந்த ஆண் குழந்தையை குளத்தில் வீசிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் ரயிலடி தெருவில் உள்ள குளத்தில் பிறந்த ஒருசில மணி நேரமான நிலையில், பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குத்தாலம் போலீசார் அந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அடையாளம் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குளத்தில் வீசி சென்றார்கள்? எப்படி இறந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com