`நாங்களும் ஏமாந்தோம்...’-இரிடியம் எனக்கூறி மோசடி செய்தோர்மீது தொடர்ந்து குவியும் புகார்கள்

`நாங்களும் ஏமாந்தோம்...’-இரிடியம் எனக்கூறி மோசடி செய்தோர்மீது தொடர்ந்து குவியும் புகார்கள்
`நாங்களும் ஏமாந்தோம்...’-இரிடியம் எனக்கூறி மோசடி செய்தோர்மீது தொடர்ந்து குவியும் புகார்கள்

ஓமலூர் அருகே இரிடியம் எனக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைதாகியிருந்த இரண்டு பேரிடம், தாங்களும் ஏமாந்ததாக பலரும் புகார் அளித்து வருகின்றனர். இதனடிப்படையில் மேலும், ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பண மோசடி, இரிடியம் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், ஓமலூர் வட்டாரத்தை சேர்ந்த ராஜீ, வில்வேந்திரன் ஆகிய இரண்டு பேர் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளனர் என்பதும் மேலும், 5 பேரிடம் பண மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மேலும் பலரையும் ஏமாற்றி பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தகவலை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் இவர்களிடம் யாரேனும் ஏமாந்திருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையில் புகார் அளிக்குமாறு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஸ்ரீ அபினவ் வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து ஓமலூர் காவல் நிலையத்தில் மேலும் சிலர், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் தாங்களும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இரிடியம், பணமோசடி தொடர்பான விசாரனை தீவிரப்படுத்துள்ளது. மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் முடிவில் மோசடிகள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கூறும்போது “இரிடியம், ரைஸ் புல்லிங், போலி கற்கள், மண்ணுளிப் பாம்பு, பணம் இரட்டிப்பு போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காத அளவிற்கு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com