காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரியின் நண்பர் கைது

காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரியின் நண்பர் கைது

காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரியின் நண்பர் கைது
Published on

சென்னை யூபிஎஸ்சி தேர்வில் ஐபிஎஸ் அதிகாரி காப்பியடித்த வழக்கில், அவரது நண்பர் சம்ஜத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வுகள் கடந்த வாரம் நடைபெற்றது. மத்திய தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வுகள் இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தப்பட்டன. சென்னையில் மட்டும் 763 பேர் இத்தேர்வுகளை எழுதினர். ‌இந்நிலையில், சென்னை பிரசிடென்சி பள்ளியில் நடந்த தேர்வின்போது, ப்ளுடூத் பயன்படுத்தி ஒருவர் தேர்வு எழுதுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷபீர் கரிம் என்பவர் ப்ளுடூத் பயன்படுத்தி தேர்வில் விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.
 பின்னர் அவர் மீது சட்டப்பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேர்வில் ஷபீருக்கு உதவியதாக அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், 18 மாத குழந்தையுடன் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இருப்பினும் கைக்குழந்தையுடன் சிறையில் இருந்த அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. 

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி காப்பியடித்த வழக்கில் கொச்சினை சேர்ந்த அவரது நண்பர் சம்ஜத் கைது செய்யப்பட்டார். அத்துடன் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நவம்பர் 17ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் ஐஏஎஸ் பயிற்சி அகாடமியை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சபீர்காரீமின் தொழில் கூட்டாளி என்பது தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com