கட்டுக்கட்டாக பணம்... ஜெய்ப்பூர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூ.4 கோடி பறிமுதல்..!

கட்டுக்கட்டாக பணம்... ஜெய்ப்பூர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூ.4 கோடி பறிமுதல்..!

கட்டுக்கட்டாக பணம்... ஜெய்ப்பூர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ரூ.4 கோடி பறிமுதல்..!
Published on
ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைதாகியுள்ளனர்.
 
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங் நடைபெற்று வருவது ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது
 
இந்நிலையில், ராஜஸ்தானில் சிலர் ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜெய்ப்பூரில் நகர போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம், 19 மொபைல் போன்கள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஜராத்தில் வசிக்கும் ரந்தீப் சிங், அஜ்மீரில் வசிக்கும் கபால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com