கொடைக்கானல் மாணவி மர்ம மரணம் தொடர்பாக 3-வது நாளாக தொடரும் விசாரணை

கொடைக்கானல் மாணவி மர்ம மரணம் தொடர்பாக 3-வது நாளாக தொடரும் விசாரணை

கொடைக்கானல் மாணவி மர்ம மரணம் தொடர்பாக 3-வது நாளாக தொடரும் விசாரணை

கொடைக்கானல் அருகே கீழ்மலை பாச்சலூர் கிராம அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிறுமி இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என உறவினர்களும், சிறுமியுடன் பயின்ற பள்ளி மாணவிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வழக்கு குறித்து மாவட்ட எஸ்.பி. நம்மிடையே பேசுகையில், “தடயங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

சிறுமியின் இறப்பை தொடர்ந்து, பாச்சலூர் கிராமத்தில் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. சிறுமி எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். உடற்கூராய்வுக்குப்பின் திண்டுக்கல் மின்மயானத்தில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பள்ளிக்கு சென்ற சிறுமி, தலை மற்றும் முகத்தில் தீப்பற்றி இறந்தது குறித்த பதற்றமும் வேதனையும் உறவினர்களிடம் படர்ந்திருக்கிறது.



சிறுமியுடன் படித்த மாணவி நம்மிடையே பேசுகையில், “11 மணிக்குப்பிறகுதான் அவளை காணவில்லை என்று தெரிந்தது. டீச்சரிடமும் கூறினேன். டீச்சர், ‘நீங்க படிக்கிற வேலையை பாருங்க’னு சொல்லிட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்து அவளை தேடிப்பார்த்தோம். என்னுடன் படித்த இன்னொரு மாணவிதான், எரிந்த நிலையில் அவளை கண்டார். பின் எல்லோரிடமும் கூறினார்” என்றார். இறப்புக்கு 2 நாட்கள் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார் மாணவி என்றும், 3 ஆம் நாள் பள்ளிக்கு சென்றபோது எரிந்த நிலையில் மீட்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே மாணவி பள்ளி செல்ல மறுத்த காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்படுகிறது.

சிறுமி இறப்பு குறித்து, மூன்றாவது நாளாக பாச்சலூர் மலைப்பகுதியில் மாவட்ட காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா, சந்திரன், கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் ஆகியோர் விசாரணை நடத்திவருகிறார்கள். பெற்றோர், பொதுமக்களிடமும் காவல்துறையினரின் விசாரணை நீடிக்கிறது. விசாரணை நிலவரம் குறித்து மாவட்ட எஸ்பி சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டபோது, சிறுமியின் மரணம் தொடர்பாக, தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com