மோசடி புகார்களை அடுத்து கட்டுமான நிறுவனத்தின் பூட்டை உடைத்து அதிரடி சோதனை.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணங்கள்!

பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் பொதுமக்களுடைய முக்கிய ஆவணங்களும் பறிமுதல் ..
முதலீட்டு ஆவணங்கள்
முதலீட்டு ஆவணங்கள்PT

சென்னை முகப்பேர் மேற்கு வள்ளலார் சாலையில் செயல்பட்டு வந்த ஏ ஆர் டி கட்டுமான நிறுவன அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஏ.ஆர்.நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீட்டு செய்த ஆவணங்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டது.

5 மணி நேரம் நடைபெற்ற சோதனை!

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ ஆர் டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சுமார் 5 மணி நேரம் சோதனைக்கு பிறகு ஏ ஆர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் பொதுமக்களுடைய முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மோசடி புகார்களை அடுத்து நடைபெற்ற அதிரடி சோதனை!

சென்னை ஏ ஆர் ஜுவல்லரி நிதி நிறுவனம் பொதுமக்களிடம் நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்தாக முதலீட்டார்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை முகப்பேர் பார்க் சாலையில் உள்ள ஏ ஆர் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏ ஆர் நகை கடையில் சோதனையில் ஈடுபட்டு முதலீட்டாளர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்துள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com