சட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை

சட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை

சட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை
Published on

லண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வியாபாரியை அடித்து கொலைச் செய்த 16 வயது சிறார்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இந்தியாவை சேர்ந்த விஜய் பட்டேல், லண்டனின் ஜில் மில் பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவதன்று விஜய்யின் கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர், அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு விஜய் அவர்களிடம் 18 வயது பூர்த்தி அடைந்தற்கான ஆதரத்தைக் கேட்டுள்ளார். லண்டனின் 18 வயதை அடைந்தவர்கள் மட்டுமே சிகரெட் உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை மீறாத விஜய் சிகரெட் தர மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று இளைஞர்கள், விஜய்யை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனியில் அனுமதித்தனர். கடந்த சனிக்கிழமை அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லண்டன் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தார். விஜய்யின் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து லண்டன் காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். 16 வயதாகும் இந்தச் சிறார்கள் இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். நாட்டின் சட்டத்தை மதித்து நடந்த விஜய் பட்டேலுக்கு இத்தகைய நிலமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று அவரின் குடும்பதார்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com