\
'மதபோதனை' பெயரில் பாலியல் தொழில்: குமரியில் மதபோதகர் உட்பட 7 பேர் கைது

'மதபோதனை' பெயரில் பாலியல் தொழில்: குமரியில் மதபோதகர் உட்பட 7 பேர் கைது

'மதபோதனை' பெயரில் பாலியல் தொழில்: குமரியில் மதபோதகர் உட்பட 7 பேர் கைது
Published on

கன்னியாகுமரி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ மதபோதகர் உட்பட 7 பேரை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

எஸ்டி மங்காடு பகுதியை சேர்ந்த லால் ஷைன் சிங் என்பவர் அதே பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் மதபோதனைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையிலான செயல்கள் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மதபோதகர் லால் ஷைன் சிங், இளம் பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது, 19 வயது இளம்பெண் ஒருவரை அவரது தாயாரே பாலியல் தொழிலுக்காக அழைத்து வந்த அதிர்ச்சித் தகவலும் தெரியவந்தது. பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com