”சிறையிலேயே பெண் கைதிகள் கர்ப்பம் தரிக்கிறார்கள்” - கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

மேற்கு வங்க சிறை சாலையில் உள்ள பெண்கள் சிறையிலேயே கர்ப்பமாவதால், ஆண் சிறை ஊழியர்களை பெண் கைதிகள் இருக்கும் பகுதிகளில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்முகநூல்

மேற்கு வங்க சிறை சாலையில் உள்ள பெண்கள் சிறையிலேயே கர்ப்பமாவதால், ஆண் சிறை ஊழியர்களை பெண் கைதிகள் இருக்கும் பகுதிகளில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் சீர்திருத்த இல்லங்கள் தொடர்பான வழக்குகளைக் குறிப்பிடும்போது,  நீதிமன்றத்தின் நண்பனாக கருதப்படும் அமிக்ஸ் கியூரி சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்த மனுவில் “சிறையில் இருக்குபோதே பெண் கைதிகள் கர்ப்பமாகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள பல சிறைகளில், 196 குழந்தைகள் சிறையிலேயே பிறந்து காவலில் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் செல்வதை தடை செய்யவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு செய்தபோது குறைந்தது, 15 பெண் கைதிகள் தங்களது குழந்தைகளோடு இருந்துள்ளனர். இவர்கள் சிறையில் பிறந்த குழந்தைகள் என்ற தகவல் கிடைத்ததால், இதனை மேற்கோள் காட்டி இவ்வழக்கானது தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கம்
கணவரை பழிவாங்க சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலியான வழக்கு - மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை!

இந்த வழக்கு வரும் திங்கள் கிழமையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதிரடியான தீர்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com