திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தனியார் வங்கியில் போலி நகைகள் வைத்து 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மன்னார்குடி, அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், புகழ்மங்கை ஆகியோர் போலி நகைகள் அடகு வைத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளர் உதவியுடன், போலி நகைகளை வைத்து 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கோவிந்தராஜ் அளித்த புகார் அடிப்படையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வங்கியில் உள்ள அறையில் வைத்து, நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வங்கி மேலாளர் அளித்த புகாரி பேரில் நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.