\
சென்னை: சாலையில் பணம் சிதறிக்கிடப்பதாக கார் ஓட்டுநரின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளை

சென்னை: சாலையில் பணம் சிதறிக்கிடப்பதாக கார் ஓட்டுநரின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளை

சென்னை: சாலையில் பணம் சிதறிக்கிடப்பதாக கார் ஓட்டுநரின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளை
Published on
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் கார் ஓட்டுநரின் கவனத்தை திசைதிருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
புது பெருங்களத்தூரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான முருகேசன் தமது மனைவியின் 38 கிராம் நகையை சீனிவாச நகரில் உள்ள வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்த நபர்களில் ஒருவர் சாலையில் பணம் சிதறிக்கிடப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி முருகேசன் காரிலிருந்து இறங்கி பார்த்த போது மற்றொரு நபர் கார் கதவை திறந்து பணம் மற்றும் 4 கிராம் நகையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து, காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com