தாயின் 50வயது காதலனால் கர்ப்பமான மைனர் மகள் - ஆதார் கார்டால் அம்பலான கொடூரம்!

தாயின் 50வயது காதலனால் கர்ப்பமான மைனர் மகள் - ஆதார் கார்டால் அம்பலான கொடூரம்!
தாயின் 50வயது காதலனால் கர்ப்பமான மைனர் மகள் - ஆதார் கார்டால் அம்பலான கொடூரம்!

தனது 50 வயது காதலனுக்கு 17 மகளை இரையாக்கிய தாய் போலீஸுக்கு பயந்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த ரெட்டேரி போலீசார் காதலனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமார்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். நாளடைவில் முத்துக்குமார் அந்த பெண்ணின் 17வயது மகள் மீது ஆசை இருப்பதாகtஹ் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் சம்மதித்ததால் கடந்த ஒரு வருடமாக முத்துக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். மருத்துவமனைக்கு சென்றால் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்பதற்காக அந்த பெண் வீட்டிலேயே வைத்து மருந்து அளித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்திருக்கிறார். இதில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேறு வழியின்றி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அந்த பெண் அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது குழந்தையுடைய தாயின் ஆதார் கார்டை செவிலியர்கள் கேட்டபோது, அந்த பெண் மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும் என செவிலியர்கள் கூறியுள்ளனர். வேறு வழியின்றி அந்த பெண் ஆதார் கார்டை காண்பிக்கும்போது குழந்தையின் தாய்க்கு 17 வயது என்பது தெரியவந்திருக்கிறது.

பின்னர் குழந்தையின் தந்தை யார் என கேட்டப்போது முத்துக்குமாரை காண்பித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமாரை பொன்னேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com