முக்கிய அரசியல் தலைவர்களை எனக்குத் தெரியும்: பண மோசடியில் கணவன் மனைவி கைது

முக்கிய அரசியல் தலைவர்களை எனக்குத் தெரியும்: பண மோசடியில் கணவன் மனைவி கைது

முக்கிய அரசியல் தலைவர்களை எனக்குத் தெரியும்: பண மோசடியில் கணவன் மனைவி கைது
Published on

தமிழகத்தில் திமுக அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தமக்குத் தெரியும் என வார்த்தை ஜாலம் காட்டி ரூ.47 லட்சம் மோசடி செய்த நபர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் தணிக்கை அலுவலகம் நடத்தி வருவதாகவும், தன்னிடம் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுடன் சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஆட்சி மாறியதும் திமுகவில் மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வரும் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அரசுத்துறையில் எனது மகளுக்கு வேலை வாங்கித் தருவாதாக கூறினார். அதோடு செகரட்டரி அலுவலகத்திலிருந்து பேசுவதாக வேறொரு பெண்ணை வைத்து பேச வைத்து நம்ப வைத்துள்ளனர். இதனால் பல தவணைகளாக 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் பல தவணைகளாக செலுத்தியதாகவும்.

ஆனால், அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்ததால் பணத்தை திரும்பித் தரும்படி கேட்டபோது. பணம் தராமல் இழுத்தடித்தாகவும் ஒரு கட்டத்தில் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகாவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ரேணுகா ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com