ஹைதராபாத்: சாலையோரத்தில் சிறுநீர் கழித்த நபர் அடித்துக்கொலை

ஹைதராபாத்: சாலையோரத்தில் சிறுநீர் கழித்த நபர் அடித்துக்கொலை

ஹைதராபாத்: சாலையோரத்தில் சிறுநீர் கழித்த நபர் அடித்துக்கொலை
Published on

ஹைதராபாத்தில் சாலையோரத்தில் சிறுநீர் கழித்ததற்காக ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை 33 வயதான ஆனந்த்ராஜ் என்ற நபர் வேலை முடிந்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது தடுமாறிய நிலையில் அந்த வழியாக வந்த அனில் பாபு மற்றும் சிவசங்கர வரபிரசாத் ஆகிய இரண்டுபேரும் ஆனந்தராஜிடம் சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆனந்த்ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அந்த இரண்டுபேரின் நண்பரான சங்கர் என்பவர் அந்த வழியாக வந்துள்ளார். சங்கரிடம் இதுபற்றி கூறியபோது, அவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

வாக்குவாதம் அதிகரிக்கவே சங்கர் தனது கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டை கழற்றி ராஜை குத்தியிருக்கிறார். பிறகு மூவரும் சேர்ந்து ராஜை சராமாரியாக தாக்கி அடித்து உதைத்திருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ரச்சகொண்டா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராஜுக்கும், குற்றவாளிகள் 3 பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறப்படும் நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com