மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது
குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரைச் சேர்ந்த தேவநீதி என்பவருக்கு சிந்துஜா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிந்துஜா கடந்த 6 மாதத்திற்கு முன்பே புழல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று சிந்துஜாவின் வீட்டிற்கு சென்ற தேவநீதி, மதுபோதையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்ததுடன், அதே கத்தியால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டார். சிந்துஜாவின் அலறல் சத்தம் கேட்டுவந்த அப்பகுதி மக்கள், தப்பியோட முயன்ற தேவநீதியைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிந்துஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேவநீதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.