சென்னை மேடவாக்கத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடவாக்கம் ராம்தாஸ் தெருவில் வசிப்பவர்கள் ராஜேஷ் - சந்தியா தம்பதியினர். இதில் ராஜேஷ் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச்செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஷ் அதிகாலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
சந்தியாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தப் போது, அவர் முழுவதுமாக தீயில் எரிந்துக் கொண்டிருந்தார்.இதனால் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது கணவர் ராஜேஷூம் பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.