\
பூந்தமல்லி: மனைவியை அடித்து கொன்ற கணவன்? -3 குழந்தைகளுடன் தலைமறைவு

பூந்தமல்லி: மனைவியை அடித்து கொன்ற கணவன்? -3 குழந்தைகளுடன் தலைமறைவு

பூந்தமல்லி: மனைவியை அடித்து கொன்ற கணவன்? -3 குழந்தைகளுடன் தலைமறைவு
Published on

பூந்தமல்லியில் மனைவியை அடித்து கொன்ற கணவன், 3 குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் தனது மனைவி நந்தினி ( வயது 27) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். கணவன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவர் ஆனந்தராஜ், தனது மனைவியை தாலி கயிற்றில் கழுத்தை நெரித்து கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. 

மனைவி இறந்து போனதை அறிந்த ஆனந்தராஜ் தனது மூன்று குழந்தைகளுடன் தலைமறைவாக உள்ளார். பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com